நமது வரலாறு
கரிகால் சோழன் என்ற மன்னனுக்கு பிறகு, சுமார்
2000 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்வேர்கிள்ளி என்னும் சோழ மன்னன் ஒருவன் நாக நாட்டைச்
சேர்ந்த பீலிவளை என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். மன்னனை கல்யாணம் செய்து
கொள்ள பீலிவளை ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, மகன்
பெரியவனானதும் நாட்டின் பாதியை கொடுக்க வேண்டும் என்பது. மன்னனும் அதற்க்கு
சம்மதித்தான். பின்னர் பீலிவளை நாகநாடு சென்று, தன் மகனை பெற்று, அவனுக்கு தக்க
வயது வந்ததும், வெளிநாடுகளுக்கு சென்று வணிகம் செய்யும் வணிகச் சமுதாயத்துடன்,
மன்னனிடம் மைந்தனை சேர்க்கும் படி கூறி அனுப்பினாள். வரும் வழியில், கடலின்
சீற்றத்தால், கப்பல் நாகபட்டினதிற்கு அருகில் உடைந்து மூழ்கியது. அப்படகில்
இருந்தவர்கள், உடைந்த மரத்துண்டுகளை பிடித்துக்கொண்டு எப்படியுயோ கரை சேர்ந்தனர். இதில்,
பீலிவளையின் மைந்தனும், கழுத்தில் கொடியுடன் கரை சேர்ந்தான். அவனை வணிகர்கள்
மன்னனிடம் ஒப்படைத்தனர். மன்னனும், தான் கொடுத்த வாக்கிற்கு இணங்க தன் மண்ணின்
பாதியை மைந்தனிடம் பிரித்து கொடுத்து ஆள சொன்னான். கழுத்தில் கொடியுடன் கடல்
அலையில் மீண்டு வந்ததால், “தொண்டைமான் இளந்திரையன்” என்று அழைக்கப்பட்டான்.
தொண்டைமான் ஆண்டதால், இன்றைய காஞ்சிபுரம் தொண்டைமண்டலம் என்று அழைக்கப்பட்டது.
மேற் சொன்னதில், நாம் காண வேண்டியது.....
இதில், வணிகன் என்றே குறிபிடப்பட்டுள்ளது. வேறு
எந்த தொடர்பும் இல்லை. மணிமேகலையின் படி, தொண்டை மண்டலத்தின் முதல் அரசன்
தொண்டமான் இளந்திரையன் அவான். மேலும் இவன் ஒரு சங்க கால மன்னன் என்பதில் ஐயமில்லை.
இவன் பெரும்பானற்றுப்படையின் (உருத்திரங் கண்ணனார் எழுதியது) பாட்டுடைத் தலைவன்
ஆவான். மணிமகலையின் குறிப்புப்படி நாகநாடு ஈழத்தை அடுத்த மணிபல்லவம் எனும் தீவில்
இருந்தது. இதுவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசநாயகம் என்ற ஆராய்ச்சியாளரின்
கருத்தும்.....
இதன் படி காணும் போது, நாம் நாகநாட்டில் இருந்து
வந்திருப்போம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் இன்னொரு கருத்தும் உள்ளது. அந்த
காலத்தில் நாகநாடு என்பது இப்போதைய கம்போடியா தேசம் என்றும் சொல்லபடுகிறது. மேலும்
மனித வரலாற்றின் படி, நாகர்கள் என்பவர்கள் எல்லா நாட்டிலும் இருந்த ஒரு பழங்குடி
இனம். இன்னும் நாகாஸ் என்று சொல்லப்படுகிற வழக்கம் எல்லா நாடுகளிலும் உள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்க, ஆப்ரிக்கா, ஆசியா எல்லா இடத்திலும்.....
மேலும் ஒரு கருதுகோளாக நமக்கு கிடைப்பது,
நாகநாடு, புகார் நகரத்திற்க்கு அப்பால் 400 யோசனை பரப்பளவில் இருந்தது என்றும்,
இந்நாட்டை வளைவணன் என்ற அரசன் வாசமயிலை என்ற அரசியுடன் ஆண்டதாகவும், இவர்களுடைய
மகளே, பீலிவளை என்றும் ஓன்று உள்ளது. மற்றொரு கருதுகோள், விஜயனும் அவனது
தோழர்களும் இலங்கைக்கு வரும் முன்னர், இலங்கையில் இயக்கர் மற்றும் நாகர் என்ற இரு
இனக்குழுக்கள் இருந்ததாகவும், அத்துடன், நாகநாட்டில் தான் அரியனைப் போட்டி
நடந்ததாகவும் அதை தீர்த்து வைக்கவே புத்தர் இங்கு வந்தார் என்றும் இலங்கையின்
வரலாற்று புத்தகமான மகாவம்சம் கூறுகிறது.
மேலும், 2000 க்கு முன்னர், இலங்கையில் எல்லாளன்
என்ற மன்னன் ஆண்டு வந்ததாகவும், மகாவம்சத்தின் படி சொல்லப்படும் வரலாறு, தமிழ் சோழ
மன்னனான மனு நீதிச் சோழனுடன் ஒத்து போகிறது. பீலிவளை வரலாறு பொய்யோ நிஜமோ, நாம்,
உண்மையிலேயே தொண்டைமண்டலமான காஞ்சிபுரத்தில் இருந்திருந்தோம் என்றால் இந்த தமிழ்
மன்னன் மூலமாக கூட ஆகலாம். இதுவொரு ஆராய்ச்சிக்குறிய ஒரு கருதுகோள்.
மேலும், வணிகத்தைப் பொறுத்தவரை, வணிகர்களுக்கு
எல்லா மன்னர்களும் மதிப்பும் பரியதையுமே கொடுத்து உள்ளனர். அதனால் தான், எத்தனை
ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், வணிகத்தில் ஒரு குறைவும் வந்ததில்லை.
இல்லையென்றால் ஒவ்வொரு போர் சூழ்நிலையிலும் வணிகம் தடைப்பட்டிருக்கும். அனால்
தமிழகத்தை பொறுத்தவரை, எந்த ஒரு அரசாங்கமும் 300 வருடங்களுக்கும் மேல்
ஆண்டதில்லை.முதல் 3 நூற்றாண்டு முவேந்தர்கள், இரண்டாம் முன்று களப்பிரர்,
மூன்றாவது மூன்று பல்லவன் பாண்டியன், நான்காவது மூன்று சோழனும் மற்றவர்கள் சிறிய
அளவிலும்...... ஆனால் வணிகத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தின் கடற்கரைத் துறைமுகங்கள்
பெரும் பணியை செய்துள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நாம் காஞ்சியில்
இருந்திருக்கலாம் என்று முடிவு செய்யலாம். ஆனால், அதை உறுதி செய்ய போதிய ஆவணங்கள்
இல்லை.
பொருளாதாரம், சமூகம், அரசியல்
ஆகிய களங்களில் தமிழகக் கோவில்கள் பெரும்பங்கு வகித்தன, பண்பாட்டு
மையங்களாகப் பங்களித்தன. சமயத்தலைமை, சமூகக்கட்டுப்பாடு, பொருளாதார அதிகாரம் மூன்றும் இணைந்த
அறம்சார் அமைப்பாகக் கோவில்கள் செயல்பட்டன. கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள்
அசையும் சொத்து அசையா சொத்து என ஆடுகளும் மாடுகளும், நில புலன்களும், அணிகலன்களும், தானியங்களும், தங்கம், பணம்
போன்றவை கருவூலத்தில் சேகரிக்கப்பட்டு அப்பகுதி பொருளாதார வளர்ச்சிக்காக (இக்கால
வங்கிகள் செய்வது போல), சுழற்சி முறையில் பணம் தேவையானவருக்கு வட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டு அந்த
வருவாயின் மூலம் கோவில் திருப்பணிகளும், நிர்வாக செலவுகளும், விழாக்களும்
நடத்தப்பட்டன. கொடைகள் வழங்குவதிலும், கோவில்
நிர்வாகத்தில் பங்கேற்பதும் என வணிகர்கள் ஈடுபட்டு மக்களிடையே தங்கள் மதிப்பைத்
தக்க வைத்து, அவர்களது வணிகத்திற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்று சமூகத்தில்
மதிப்புடன் வாழ்ந்துள்ளனர். நிலையான வலுவான அரசு இல்லாமை வணிக வளர்ச்சியை
பதிக்காவிட்டாலும், நிலையான சமூக நிர்வாக நிறுவனங்கள் வணிக
வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்று கனகலதா முகுந்த் தனது
பழந்தமிழ் வணிகர்கள் என்ற புத்தகத்தில் கருதுகிறார்
இன்று நாம் சொல்கின்ற “Merchant Guilds”
போலத்தான் அன்றும் நாம் இயங்கி வந்திருக்கிறோம். அதாவது வணிகக் குழுக்களாக.....
அந்த காலத்தில் நிகமம் என்றொரு வணிகக் குழு இயங்கி வந்துள்ளது. இது இந்தியா
முழுவதும் உண்டாயிருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுபோல் நிறைய குழுக்கள் இயங்கி வந்துள்ளன.
இதற்கு நாம் பிறகு வருவோம்
காஞ்சிபுரத்திற்கு பிறகு, சோழர்களின் அழைப்பை
ஏற்றுக்கொண்டு சென்ற இடம் காவிரிப்பூம்பட்டினம்.
மாசாத்துவன், சாத்தம்மை, சாத்தப்பன் என்ற
பேர்கள் பொதுவான வணிகனுக்கு உண்டான பேர்களாகும். இதைவைத்து பார்க்கும் போது நாம்
ஒரு சைவர்களாக தெரியவில்லை. சைவத்திற்கு மாறுவதற்கு முன்பு நம் சிரவண மதங்களாகிய
புத்ததையோ சமணத்தையோ சார்ந்தவர்களாக இருக்கலாம். செட்டி என்ற பெயர், செத்தி
(Setthi) என்ற பாலி மொழியில் இருந்து எடுத்த ஒரு வாசகமாகவும் காணப்படுகிறது.
சமஸ்கிருதத்திலும் ஸ்ரேஷ்டி (Shreshti) என்ற ஒரு வாக்கு உள்ளது.
ஆனால் செட்டியார்களின் சில கலாச்சார பண்பாடுகள்,
சாணான், முஹம்தியன் அல்லது உப்பு குறவர்களை ஒத்து உள்ளது. தலையை மொத்தமாக
வழித்துக் கொள்வது முஹம்தியர்களின் பண்பாட்டை போன்றும், பெண்கள் அணியும் காதணிகள்
சானார் பெண்களைப் போன்றும் உள்ளது. செட்டியார்களின் தாலி எனப்படும் கழுத்துரு
உப்பு குரவர்களான மீனவர்களின் வலையில் விழும் நண்டை ஒத்து உள்ளது என்றும் சிலர்
கூறுகின்றனர்
ஆனால் நகரத்தார், 5000 வருடங்களுக்கு முன்பே
(கலியுகம் 204) சந்த்யபுரி என்னும் நாகநாட்டில் வசித்ததாகவும் அவர்கள் மரகத
விநாயகரை வழிபட்டு வந்ததாகவும் பழைய சரித்தரத்தில் உள்ளன. இந்த காலகட்டத்தில் தான்,
மன்னனின் தொந்தரவு தாங்க முடியாமல், அவர்கள் தொண்டை மண்டலம் வந்ததாகவும்,
அப்பொழுது காஞ்சிபுரம் மன்னன் அவர்களை நல்ல முறையில் வரவேற்று சிறப்பிததாகவும்,
அங்கு சுமார் 2000 வருடங்கள் வசித்ததாகவும், அப்பொழுது தொண்டை மண்டல மன்னனாக
இருந்த பிரதாபனின் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல், சோழ மன்னனின்
அழைப்பிற்கேற்ப காவிரிப்பூம்பட்டினத்திற்கு கலியுகம் 2312 ல் சென்றதாக பழைய வரலாறு
கூறுகிறது. அப்பொழுது சோழ நாடு ஒன்றும் சொல்வது போல வளமான நாடாக இருக்கவில்லை.
அதனால் இவர்கள் வருவதை மன்னன் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டான். இவர்கள் புகார்
வந்தவுடன், மன்னனின் ஆனைக்கேற்ப கிழக்கு, மேற்கு மற்றும் தெற்குத் தெருக்களில்
குடியிருந்தனர். வடக்குத் தெருவில் ஏற்கனவே பல வணிகர்கள் குடியிருந்த காரணத்தினால்
அங்கு குடியேறவில்லை. சோழர்கள் இவர்களுக்கு மகுடதன வைசியர் என்ற பட்டத்தினை
கொடுத்தனர். இவர்களுக்கு மன்னன் சிங்க உருவத்துடன் உள்ள கோடி வைத்துக் கொள்ள
அனுமதி கொடுத்தார். வரலாற்றின் படி இங்கு இவர்கள் 1400 வருடங்கள் வாழ்ந்ததாக
கூறப்படுகிறது. அப்பொழுது அரசனாக இருந்த பூவந்தி சோழன் என்ற அரசனின் கொடுமைக்கு
நகரத்தார் பெண்கள் அட்பட்டனர். அதனால் மனமுடைந்த செட்டியார் ஆண்களும் பெண்களும்,
தமது குழந்தைகளை ஆத்மானந்த சாஸ்திரி என்ற பிராமன குருவிடம் ஒப்படைத்துவிட்டு,
சுமார் 8000 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மொத்த குழைந்தைகள் 1502, அதில் 600 பேர் ஆறு வழி
வந்த மேற்கு தெரு ஆட்கள் என்றும், 502 பேர் ஏழு வழி வந்த கிழக்கு தெரு ஆட்கள்
என்றும், மேலும் 400 பேர்கள் தெற்குத் தெரு சார்ந்த நான்கு வழி வந்தவர்கள் என்றும்
சொல்லப்படுகிறது.
இதற்க்கு சில ஆண்டுகளுக்கு பின்பு பூவந்தி சோழன்
உடல் நலக்குறைவால், தன் மகன் ராஜா பூஷன சோழனை அரியணையில் அமர்த்த விரும்பினான்.
ஆனால் மகுடதன வைசியர்களான நகரத்தாரால் அவருக்கு மகுடம் சூட்ட முடியவில்லை.
ஏனென்றால் கல்யாணம் செய்துகொண்டால்தான் ஒரு புள்ளி ஆக முடியும். கல்யாணம் செய்து
கொள்ள செட்டியார்களில் பெண்கள் இல்லை. ஏனென்றல் எல்லோரும் தற்கொலை செய்து
கொண்ட காரணத்தினால். புள்ளியானால் தான்
மகுடம் சூட்ட முடியும். அரசனிடம் முறையிட்டனர். அரசனும் சிவாச்சார்யகோளோடு
கலந்துரையாடி வெள்ளாள இனத்துடன் கூட அறிவுரை செய்தனர். மேலும் இது நம் இன குடிகளை
அதிகப்படுதிக் கொள்வதிற்க்கு தானே தவிர, மேற்கொண்டு கொள்வினை கொடுப்பினை வைத்துக்
கொளவதற்கு அல்ல என்ற முடிவுடன் ஏற்று கொள்ளப்பட்டது.
தொடரும்.....
எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்
எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்