பழங்கால மத சம்பிரதாயங்களை பற்றி பார்க்கும் போது, சில முரண்பாடுகளை சொல்ல வேண்டியுள்ளது. பழங்கால மதங்களான ஆசீவகம், சமணம் மற்றும் புத்தம், மேலும் முஸ்லிம் & கிறிஸ்டியன் ஒப்பிடும் பொது, சிலபல பொதுவான குணங்களும் மாறுபட்ட கருத்துக்களும் வருகின்றன.
ஒருவர் சொல்கிறார், ஆசீவகமே முதல் மதம் என்று. மற்றொருவரோ சமணத்திலிருந்து பிறந்த குழந்தைகளே புத்தமும், ஆசீவகமும் என்கின்றனர். இது எப்படியோ நமக்கு எல்லாம் ஆதியில் ஒரு வாழ்கை நெறிமுறை என்று ஓன்று இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து தான் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும். நான் சொல்வது எல்லா மனித குலங்களுக்குமே......
திருவள்ளுவர் ஒரு அசீவகரே என்று சிலர் கூறுகின்றனர். ஏனென்றால் அவருடைய கடவுள் வாழ்த்து பாடலாகிய முதல் குறளில் "ஆதி பகவன்" என்றே கூறுகிறார். எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை பற்றியோ கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்கின்றனர். ஆதி பகவன் என குறிபிடுவது சிவனை பற்றித்தான் என்றும், சிவனும் ஒரு சித்தரே என்றும் சொல்கின்றனர். ஏனென்றால் அசீவகத்தில் தனிப்பட்ட கடவுள்கள் என்று ஒன்றில்லை என்றும், அறிவில் சிறந்தவர்களை அறிவர் என்று அழைப்பதும் அவ்வாறு அறிவில் சிறந்தவரான சிவனும் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்றும் அவர் தான் ஆதி யோகி ஆன சிவன் என்றும் குறிப்பிடுகின்றனர்
அய்யனார் வழிபாடும் அசீவகத்தை ஒத்தது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். சப்த முனி வழிபாடும், சப்த கன்னிகை வழிபாடும் அசீவகத்தை ஒத்து உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். அறிவனார் வழிபாடு, அய்யனார் வழிபாடு என்று வந்ததா என தெரியவில்லை.
நிறங்களே ஆசீவகத்தின் கோட்பாடு என்று ஓன்று உண்டு. கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை. இவைகள் எல்லாம் ஞானத்தின் நிறங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருப்பு துவக்க நிலையையும், வெள்ளை கடை நிலையையும் குறிப்பதாக அமைந்துள்ளன. இந்த கோட்பாடை ஒட்டியே சப்த கன்னிகைகள் வழிபடும் இடங்களில், அவர்களின் நிறங்களாக உள்ளன.
மேலும் யானையும் , காளையும் இந்த கோட்பாடிலிருந்து வந்ததாகவே கருதப்படுகின்றது. யானை பிறக்கும் பொது முழுவதும் கருப்பாக பிறக்கிறது. நாட்கள் செல்ல செல்ல அதன் நிறம் மாறிக்கொண்டே வெண்மைக்கு செல்கிறது. அதனால் தான் அவரை விநாயகராக மாற்றி இந்துக்களின் முதற் கடவுளாக மாற்றிவிட்டனர் என்றும் சொல்கின்றனர்.
மேலும் முருகன் வழிபாடு, கொற்கை வழிபாடு, காளி வழிபாடு, ஐயப்பன், கருப்பர் மற்றும் அய்யனார் வழிபாடும் இதிலிருந்தே பெறப்பட்டது என்ற கருத்தும் உள்ளது.
மேலும் தொடரும்
விஸ்வநாதன்